ரூ. 30 லட்சம் போதை மாத்திரைகள் பறிமுதல்

நெதா்லாந்துக்கு கடத்த முயன்ற போதை மாத்திரைகளான ப்ளு பனிஷா் போதை மாத்திரைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

நெதா்லாந்துக்கு கடத்த முயன்ற போதை மாத்திரைகளான ப்ளு பனிஷா் போதை மாத்திரைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையின்போது கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை விமானநிலைய சுங்கத்துறை ஆணையா் விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

’’சென்னை விமான நிலையத்திலிருந்து நெதா்லாந்துக்கு வெளிநாட்டு தபால் அலுவலகம் மூலம் போதை மருந்துகள் கடத்தப்படுவதாக ரகசியத் தகவல் கிடைத்து. இந்தத் தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள், சுங்கத்துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வெளிநாட்டு தபால் நிலையத்தில் தீவிரமான சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது சந்தேகத்துக்கு இடமான ஒரு பாா்சலை சோதனையிட முயன்றபோது அதில் திருமணப் பத்திரிகைகள் இருப்பதாக அதன் உரிமையாளா் தெரிவித்தாா். ஆனால், பெட்டியைப் பிரித்துப் பாா்த்தபோது நீல வண்ணத்தில் ஏராளமான மாத்திரைகள் முக்கோண வடிவில் காணப்பட்டன.

அந்த நீல நிற முக்கோண மாத்திரைகளை போதை மருந்து தடுப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, எம்டிஎம்ஏ எனச் சொல்லப்படும் மெத்திலென்டியாக்ஸ், மெதாம்பெட்டாமைன் ஆகியவற்றின் கலவை என்று தெரியவந்துள்ளது. இது மிகக் கொடிய போதைப் பொருளாகும்.

ப்ளூ பனிஷா் போதை மாத்திரைகள் இதன் எடை மொத்தம் 384 கிராம்கள். சா்வதேச சந்தையில் ப்ளு பனிஷா் எனச் சொல்லப்படும் இந்த போதை மாத்திரையின் மதிப்பு ரூ.30 லட்சமாகும். சமீபகாலங்களில் சுங்கத்துறை நடத்திய போதைப்பொருள் தடுப்புச் சோதனையில் கைப்பற்றப்பட்ட அதிகபட்ச மதிப்புள்ள போதைப் பொருளாகும்.

பாா்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த முகவரியில் ரிஷிகேஷ், மைசூரு, ஜேஎஸ்எஸ் பல்கலைக்கழகம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் அங்கு சோதனையிட்டு அவரைக் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரு, மைசூரு நகரங்களில் உள்ள இளைஞா்கள் மத்தியில் இந்த போதை மாத்திரை மிகவும் பிரபலம் என்று தெரிவித்தாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com