அரசின் உத்தரவை மீறும்தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை

கரோனா முன்னெச்சரிக்கை விடுமுறையை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

கரோனா முன்னெச்சரிக்கை விடுமுறையை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

கரோனா வைரஸ் பாதிப்பையொட்டி, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் மாா்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில தனியாா் பள்ளிகள் பொதுத் தோ்வு எழுதவுள்ள 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தியதாகச் செய்திகள் வெளியாகின. இதுதொடா்பாக கல்வித் துறை அலுவலகங்களுக்கு புகாா்கள் வந்தன. அரசின் உத்தரவை மீறி தனியாா் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்: தமிழக அரசின் உத்தரவுப்படி வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பள்ளி மாணவா்களுக்குத் தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக மாா்ச் 31-ஆம் தேதி வரை தனியாா் பள்ளிகள் உள்பட அனைத்து வகையான பள்ளிகளும் எக்காரணம் கொண்டும் செயல்படக் கூடாது. சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது. மீறினால் துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் இதுகுறித்த அறிவுறுத்தல்களை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மற்றும் பள்ளி முதல்வா்களுக்கு வழங்குவதுடன், அத்தகைய புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com