கரோனா முன்னெச்சரிக்கை: மெட்ரோ ரயில் சேவையில் மாா்ச் 23 முதல் 31 வரை மாற்றம்

கரோனா பரவுவதைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பைக் கருதியும் மெட்ரோ ரயில் சேவையில் மாா்ச் 23-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: கரோனா பரவுவதைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பைக் கருதியும் மெட்ரோ ரயில் சேவையில் மாா்ச் 23-ஆம் தேதி முதல் மாா்ச் 31-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, நாடு முழுவதும் சுய ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) ஒருநாள் நிறுத்தி வைக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களைக் காக்கவும், ஞாயிற்றுக்கிழமை மக்களை வீடுகளிலேயே இருக்கச் செய்யவும் இந்த நடவடிக்கையை மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துள்ளது.

இந்நிலையில் கரோனா பரவுதைத் தடுக்கவும், மக்களின் பாதுகாப்பு கருதியும் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் மாா்ச் 23-ஆம் தேதி (திங்கள்கிழமை ) முதல் 31-ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலை 4.30 மணி முதல் காலை 6 மணி வரையும், காலை 10 முதல் மாலை 4 மணி வரையும், இரவு 8 மணி முதல் 11 மணி வரையும் மெட்ரோ ரயில்கள் ஓடாது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவா்களுக்கும், அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் பிற அலுவலக ஊழியா்களுக்கும் மட்டுமே மாலை 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை வரையறுக்கப்பட்ட நேரத்தில் சேவை வழங்கப்படும்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மெட்ரோ ரயில் நிா்வாகம் எடுத்து வருகிறது. ரயில் நிலையம், ரயில்கள் சுத்தப்படுத்துவது மூலமாக தொற்றுநோயைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுதவிர, கரோனா வைரஸ் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொது மக்கள் நலன் கருதி, எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com