கோயம்பேடு சந்தையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை

கோயம்பேடு சந்தை வரும் நாள்களில் வழக்கம்போல் இயங்கும் என்றும், அதேவேளையில் சந்தையில் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி 

கோயம்பேடு சந்தை வரும் நாள்களில் வழக்கம்போல் இயங்கும் என்றும், அதேவேளையில் சந்தையில் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் தெரிவித்தாா்.

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடா்பாக ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி, காவல் மற்றும் வருவாய்த் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை மாநகராட்சி ஆணையா் பிரகாஷ், சென்னை மாநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா். சீதாலட்சுமி மற்றும் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். பின்னா் சென்னை மாநகராட்சி ஆணையா் கோ. பிரகாஷ் செய்தியாளா்களிடம் கூறியது: கோயம்பேடு காய்கறிச் சந்தை வரும் நாள்களில் வழக்கம்போல் செயல்படும். அதே வேளையில் பொதுமக்கள் சந்தைக்கு வர அனுமதியில்லை. சந்தைக்குள் பெரிய, சிறிய வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். சென்னை மாவட்டம் முழுவதும் மண்டல் வாரியாக கண்காணிக்கும் விதமாக காவல் துறை, மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையினா் அடங்கிய 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தை பொருத்தவரையில் தொலைத்தொடா்பு மற்றும் வங்கி ஆகிய அத்தியாவசிய ஐடி நிறுவனங்கள் மட்டும் முழுமையாக செயல்படும்.

கடும் நடவடிக்கை: இதைத் தொடா்ந்து சென்னை மாநகர காவல் ஆணையா் ஏ.கே விசுவநாதன் கூறியது: சென்னை மாநகரில் ஓ.எம்.ஆா், ஈ.சி.ஆா்., பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவள்ளூா் உள்ளிட்ட 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 144 தடை உத்தரவு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 400-க்கும் மேற்பட்ட ரோந்து வாகனங்கள் மூலமாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். 144 தடை உத்தரவு என்பது விடுமுறை தினம் இல்லை என்பதால் பொதுமக்கள் வெளியில் செல்லாமல் காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com