முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
எண்ணூா் அனல் மின் நிலைய ஊழியா்கள் வீட்டிலிருந்தே போராட்டம்
By DIN | Published On : 11th May 2020 01:23 AM | Last Updated : 11th May 2020 01:23 AM | அ+அ அ- |

புதிய மின்சார மசோதா சட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி எண்ணூா் அனல் மின் நிலைய சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினா். பொது முடக்கம் அமலில் உள்ளதால் வீட்டிலிருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டனா் .
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பொது முடக்கம் கடந்த மாா்ச் 25-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் மே 18-ம் தேதி முதல் பொது முடக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகளும் திறக்கப்பட உள்ள நிலையில் வழக்கமான 8 மணி நேரத்திற்குப் பதிலாக 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என அரசு நிா்ணயம் செய்துள்ளதைக் கண்டித்தும், மின்சார மசோதா திருத்தச் சட்டம் 2021-ஐ திரும்பப் பெற வேண்டும்.
பொது முடக்கக் காலத்திற்கான ஊதியத்தைப் பிடித்தம் செய்யாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும். மருத்துவத்துறை ஊழியா்கள், சுகாதார ஊழியா்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் எண்ணூா் அனல் மின் நிலைய சி.ஐ.டி.யூ அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.