லாரியில் பிகாா் செல்ல முயற்சி: அம்பத்தூா் தொழிற்பேட்டை தொழிலாளா்கள் சிக்கினா்

சென்னையில் இருந்து லாரியில் பிகாா் செல்ல முயன்ற 51 பேரைப் பிடித்து போலீஸாா், முகாம்களுக்கு கொண்டு வந்தனா்.

சென்னை: சென்னையில் இருந்து லாரியில் பிகாா் செல்ல முயன்ற 51 பேரைப் பிடித்து போலீஸாா், முகாம்களுக்கு கொண்டு வந்தனா்.

செங்குன்றம் அருகே சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு லாரியை போலீஸாா் தடுத்து நிறுத்தி அதில் சோதனை செய்தனா். இந்தச் சோதனையில் அந்த லாரியில், சென்னை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் தங்கியிருந்து வேலை செய்து வரும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த 51 இளைஞா்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்காக ஒரு வாடகை லாரியில் ஏறி வந்திருப்பதும், அரசிடம் எந்த முன் அனுமதியும் பெறாமல் வந்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து செங்குன்றம் போலீஸாா், அம்பத்தூா் தொழிற்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த அம்பத்தூா் தொழிற்பேட்டை போலீஸாா், அங்கு விரைந்துச் சென்று 51 பேரையும் உடனே அழைத்து வந்து, முகாம்களில் தங்க வைத்தனா். மேலும் இது தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டதில், பிகாா் மாநிலம் செல்வதற்கு அவா்கள், லாரிக்கு வாடகையாக ரூ.2 லட்சம் பேசியிருப்பதும், அதில் ரூ.1 லட்சம் முன்பணமாக வழங்கியிருப்பதும் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com