சென்னையில் கரோனா பாதிப்பு 11,131 ஆக உயர்வு

சென்னையில் திங்கள்கிழமை 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11
சென்னையில் கரோனா பாதிப்பு 11,131 ஆக உயர்வு


சென்னை:  சென்னையில் திங்கள்கிழமை 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 131 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 549 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கேரளாவிலிருந்து சென்னை வந்த ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் திங்கள்கிழமை 549 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் இதுவரை 5,135 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 5,911 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் இதுவரை 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

திங்கள்கிழமை பதிவான கரோனா உயிரிழப்புகளில் 7 பேரில் 6 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 33 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 72 வயது ஆண், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயது ஆண் மற்றும் 68 வயது ஆண், ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட 75 வயது ஆண், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 69 வயதுப் பெண் ஒருவர் என 6 பேர் உயிரிழந்தனர். 

சென்னை மாநகராட்சிக்குட்ட 15 மண்டலங்களில் ராயபுரம், திருவிக நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய ஐந்து மண்டலங்களில் மட்டும் 6,000 -க்கும் அதிகமானோருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com