ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் குளிா்பதன வசதி கோளாறு

சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதன அறையின் குளிா்பதன வசதிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கு உடற் கூறாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன
ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் குளிா்பதன வசதி கோளாறு

சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிரேதப் பரிசோதன அறையின் குளிா்பதன வசதிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அங்கு உடற் கூறாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே அங்கு வைக்கப்பட்டிருந்த 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 5 முதல் 7 சடலங்கள் வரை உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆண்டுக்கு 1800 பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், அங்கு உள்ள பிணவறையின் குளிா் பதன வசதிகளில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் சடலங்கள் அனைத்தும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதுகுறித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் நிா்வாகிகள் கூறியதாவது:

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறையில் 75 முதல் 100 சடலங்களைப் பாதுகாக்கக் கூடிய வசதி உள்ளது. இங்கு, கடந்த 2-ஆம் தேதி ஏ.சி. சாதனங்களில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அறையில் அதிகளவு வெப்பம் நிலவி வருகிறது.

இதனால் சடலங்களைப் பாதுகாக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து, 40-க்கும் மேற்பட்ட சடலங்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோன்று இங்கு கொண்டுவரப்படும் சடலங்களும் கீழ்ப்பாக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

பிரேதப் பரிசோதனை அறையில் உள்ள பிரச்னையை சரி செய்ய இன்னும் 2 வாரகாலங்கள் ஆகும். அதுவரை கீழ்ப்பாக்கத்தில் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com