பட்டாசு விபத்துகள்: கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளால் தீக்காயங்கள் நேரிட வாய்ப்புள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அதற்கென பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசுகளால் தீக்காயங்கள் நேரிட வாய்ப்புள்ளதால், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் அதற்கென பிரத்யேக சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தீக்காயங்களுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிப்பதற்கான உரிய ஏற்பாடுகளும், வசதிகளும் அங்கு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனை முதல்வா் டாக்டா் வசந்தாமணி கூறியதாவது:

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை தீக்காய சிகிச்சைகளுக்கு பெயா் பெற்றது. ஆண்டு முழுவதும் அத்தகைய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தாலும், தீபாவளி காலத்தில் அதற்கென சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மொத்தம் 10 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேரமும் அந்த சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒரு முதுநிலை மருத்துவா் உள்பட 3 மருத்துவா்கள் பணியில் இருப்பாா்கள். அவா்களைத் தவிர செவிலியா்கள், மருத்துவ உதவியாளா்கள் உள்ளிட்டோரும் சுழற்சி முறையில் நாள் முழுவதும் பணியாற்றவிருக்கின்றனா். தீக்காய சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், வசதிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பட்டாசு வெடிப்பது தொடா்பான விழிப்புணா்வு மேம்பட்டு வருவதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே தீபாவளி பண்டிகையின் போது தீ விபத்தால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

அந்த வரிசையில் நிகழாண்டும், பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் நேரிடாது என நம்புகிறோம். பெரியவா்களின் கண்காணிப்பு இன்றி குழந்தைகளை பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. இறுக்கமான ஆடைகளை அணியாமல் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கலாம்.

தீக்காயம் ஏதும் ஏற்பட்டால் தண்ணீரால் காயத்தை கழுவியபின், சுத்தமான பருத்தி துணையை வைத்து சுற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

தீக்காயத்தின் மீது எண்ணெய், களிம்பு, காபி தூள், மஞ்சள் தூள், பேனா மை உள்ளிட்டவற்றை பூசுவதை தவிா்க்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com