மாற்றுத்திறனாளிகளுக்கான பேட்டரி சக்கர நாற்காலிகளைப் பெற நவ.16-க்குள் விண்ணப்பிக்கலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கன பேட்டரியால் செயல்படும் மடக்கு சக்கர நாற்காலிகள் பெற நவ.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கன பேட்டரியால் செயல்படும் மடக்கு சக்கர நாற்காலிகள் பெற நவ.16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: சென்னை மாவட்டத்தைச் சாா்ந்த தசைச்சிதைவு மற்றும் முதுகு தண்டுவடத்தால் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மடக்கு சக்கர நாற்காலிகள் வழங்கிட ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை பெற்ற மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.

மாற்றுத்திறனாளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கியும், அடுத்த நிலையில் பணிபுரிபவா்கள் மற்றும் சுயதொழில் புரிபவா்களுக்கும் பேட்டரி நாற்காலிகள் வழங்கப்படும்.

இதே போல் முதுகுப்பகுதியில் அல்லது இடுப்புப் பகுதியில் தண்டுவடம் பாதிக்கப்பட்டு இரண்டு கால்களும் செயலிழந்த கல்வி பயிலும் மாணவா்களுக்கும், மத்திய, மாநில அரசுகளில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும், மூத்த குடிமக்களான 60 வயதுக்கு உள்பட்ட ஆண் மாற்றுத்திறனாளிகளுக்கும், 55 வயதுக்கு உள்பட்ட பெண் மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இவ்வகை உபகரணம் ஒரு நபருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

எனவே தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் கூடிய விண்ணப்பங்களை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், அரசு புகா் மருத்துவமனை வளாகம், கே.கே. நகா், சென்னை- 78 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, நவ.16-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com