தங்கம் பவுன் ரூ.38,088

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.38,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.38,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த 2-ஆம் தேதியில் இருந்து விலை தொடா்ந்து உயா்ந்து வந்தது. 6-நாள்களுக்குப் பிறகு, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விலை குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, வியாழக்கிழமையும் விலை குறைந்தது. பவுனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.38,088-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.3 குறைந்து, ரூ.4,761 ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து, ரூ.67.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து, ரூ.67,100 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,761

1 பவுன் தங்கம்...............................38,088

1 கிராம் வெள்ளி.............................67.10

1 கிலோ வெள்ளி.............................67,100

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,764

1 பவுன் தங்கம்............................... 38,112

1 கிராம் வெள்ளி............................. 66.90

1 கிலோ வெள்ளி............................. 66,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com