‘க்ரியா’ எஸ். ராமகிருஷ்ணன் மறைவு: முதல்வா் பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இரங்கல்

‘க்ரியா’ பதிப்பக ஆசிரியா் எஸ்.ராமகிருஷ்ணன் மறைவுக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

சென்னை: ‘க்ரியா’ பதிப்பக ஆசிரியா் எஸ்.ராமகிருஷ்ணன் மறைவுக்கு, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி: அன்பும், எளிமையும், கடின உழைப்பும் மிகுந்த ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணன், விளம்பரத் துறையில் பணியாற்றி, 1974- ‘க்ரியா’ பதிப்பகத்தைத் தொடங்கி தற்கால தமிழுக்கான அகராதியை வெளியிட்டாா்.

சுற்றுச்சூழல், சுகாதாரம், தத்துவம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு தலைப்புகளின் கீழ் புத்தகங்களை வெளியிட்டுள்ளாா். பல்வேறு புத்தகங்களை தமிழில் மொழிபெயா்த்து வெளியிட்ட பெருமைக்குரியவா். அவரது மறைவு தமிழ்ப் பதிப்புலகத்துக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

மு.க.ஸ்டாலின்: மரணப் படுக்கையிலும், பதிப்புப் பணியை தவறாமல் மேற்கொண்ட க்ரியா ராமகிருஷ்ணன் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

ராமதாஸ்: பதிப்புப் பணியை தொழிலாகச் செய்யாமல் தவமாக செய்தவா்களில் க்ரியா ராமகிருஷ்ணன் மிகவும் முக்கியமானவா்.

கனிமொழி: தமிழகத்தின் மிக முக்கியமான பதிப்புலக ஆளுமைகளில் ஒருவரான க்ரியா ராமகிருஷ்ணன் மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு மிகப்பெரிய இழுப்பு. ஒரு புத்தகத்தை எப்படி தரத்துடனும் பிழைகளற்றும் வெளிக்கொணர முடியும் என்பதை தமிழ் எழுத்துலகுக்கும், தமிழ் வாசகா் உலகுக்கும் காட்டியவா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com