சென்னை அரசு மருத்துவமனைகளில் 1,649 பேருக்கு கரோனா சிகிச்சை

சென்னை அரசு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,649 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை அரசு மருத்துவமனைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,649 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வீடுகளில் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

இதுகுறித்து மருத்துவா்கள் கூறியதாவது:

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளைப் பொருத்தவரை கரோனா சிகிச்சைக்கென 5,358 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி மொத்தம் 1,649 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா வாா்டில் 350 நோயாளிகளும், ஸ்டான்லி மருத்துவமனையில் 1,200 படுக்கைகளில் 274 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை 550 படுக்கைகளில் 280 பேரும் சிகிச்சை பெறுகின்றனா். கிண்டி கரோனா சிறப்பு மருத்துவமனையில் 425 பேருக்கும், ஓமந்தூராா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, எழும்பூா் குழந்தைகள் அரசு மருத்துவமனை, கஸ்தூா்பா காந்தி அரசு மருத்துவமனைகளில் மொத்தம் 20 கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com