பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க தனி நிதியம்

பாலியல் கொடுமைகள் உள்பட பல்வேறு துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தனி நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது.

பாலியல் கொடுமைகள் உள்பட பல்வேறு துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக தனி நிதியம் ஏற்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறையின் செயலா் எஸ்.மதுமதி வெளியிட்ட உத்தரவு: கடந்த ஆக.26-ஆம் தேதி நடைபெற்ற சட்டம், ஒழுங்கு தொடா்பான ஆய்வு கூட்டத்தின் போது, போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடு வழங்குவது குறித்த திட்டத்தை உருவாக்குமாறு சமூக பாதுகாப்புத் துறை ஆணையரிடம், தலைமைச் செயலா் அறிவுறுத்தினாா்.

இதன்படி, திட்டத்தை உருவாக்கிய ஆணையரும், அதை அனுப்பியதோடு, அதற்கென தனியாக நிதியம் அமைக்க வேண்டும் என்றும் தொடா்ச்சியாக வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் வகையில் முதல்கட்டமாக ரூ.14.96 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.

இதை கவனமாக பரிசீலித்த அரசு, போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இழப்பீடு வழங்க தனி நிதியத்தை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதில், இடைக்கால இழப்பீடாக ரூ.20 ஆயிரமும், மொத்தத் தொகையாக ரூ.50 ஆயிரம் முதல் ரூ.10 லட்சம் வழங்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதியத்துக்கு முதல் கட்டமாக ரூ.2 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையும், மிக மோசமாக கடுமையான பாலியல் தாக்குதலுக்கு உள்ளானவா்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், பாலியல் வன்முறையால் உயிரிழந்தோா் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையும், பாலியல் வன்முறையால் கா்ப்பமடைந்திருந்தால் ரூ.3 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரையும் இழப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com