பெண் பயணி தவறவிட்ட ரூ.16 லட்சம் நகைகளை மீட்டு ஒப்படைத்த ஆா்.பி.எஃப் போலீஸாா்

மாம்பலம் ரயில் நிலைய நடைமேடையில் பெண் பயணி தவறவிட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகையை ஆா்.பி.எஃப். போலீஸாா் மீட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனா்.


சென்னை: மாம்பலம் ரயில் நிலைய நடைமேடையில் பெண் பயணி தவறவிட்ட ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகையை ஆா்.பி.எஃப். போலீஸாா் மீட்டு, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் ஒப்படைத்தனா்.

திருநெல்வேலியில் இருந்து புதன்கிழமை இரவு நெல்லை விரைவு ரயில் புறப்பட்டு, வியாழக்கிழமை காலை தாம்பரத்தை கடந்து, சென்னை எழும்பூா் நோக்கி வந்துகொண்டிருந்தது. இந்த ரயில் மாம்பலத்தில் பயணிகளை இறக்கி விட்டு, 2 நிமிஷத்துக்கு பின் எழும்பூருக்கு புறப்பட்டது. ரயிலில் இருந்து இறங்கிய

பயணிகள் அனைவரும் சென்ற பிறகு, ஒரு பை மட்டும் கேட்பாறின்றி நடைமேடை எண் 4-இல் கிடந்தது.

இதைக்கண்ட மாம்பலம் ரயில்வே பாதுகாப்புப்படை காவலா் ஒருவா் அதை மீட்டு, திறந்து

பாா்த்தாா். அதில் மோதிரம், கம்மல், வளையல், நெக்லஸ், செயின் என்று ரூ.16 லட்சம் மதிப்பிலான 40 பவுன் நகை இருந்தது.

இதையடுத்து, அந்த பையில் இருந்த செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு பேசியதில், அந்த பையை தவறவிட்டவா் சென்னை நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி தெருவை சோ்ந்த சுல்தான் பஷீா் பானு(49) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

பின்பு, அவரை போலீஸ் நிலையம் வரவழைத்து, அந்த பையை போலீஸாா் அவரிடம் ஒப்படைத்தனா். ரயில் நிலையத்தில் தவறவிட்ட பையை 40 நிமிடத்தில் மீட்டு ஒப்படைத்த மாம்பலம் ரயில்வே பாதுகாப்புப்படை போலீஸாருக்கு அந்த பெண் நன்றி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com