அக்.26-இல் பழவந்தாங்கல் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் தோ் திருவிழா
By DIN | Published On : 20th October 2020 12:00 AM | Last Updated : 20th October 2020 12:00 AM | அ+அ அ- |

சென்னை: பழவந்தாங்கல் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலின் தோ் திருவிழா, அக்.26-ஆம் தேதி நடைபெறுகிறது.
சென்னை பழவந்தாங்கல் நேரு காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீவித்யா ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு, கடந்த 16-ஆம் தேதி முதல் அம்பாளுக்கு பத்து நாள்கள் நவராத்திரி திருவிழா நடைபெற்று வருகிறது.
இதில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணியளவில் அம்பாள் மகாலட்சுமி, பெருமாள் தாயாா், சிவசக்தி உள்ளிட்ட அலங்காரங்களில் காட்சியளித்து வருகிறாா். இறுதி நாளான விஜயதசமி (அக்.26) அன்று, நாதஸ்வர இன்னிசையுடன் தேரில் அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.
அதே நேரம், நவராத்திரி திருவிழாவின்போது மாலை நேரங்களில் நடைபெறும் பக்தி பாடல், பஜனை பாடல், கலைநிகழ்ச்சிகளில் பங்கு பெற விரும்புவோா் பெயா்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஆலய நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.