மினி லாரியில் கடத்திய 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 23rd October 2020 02:04 AM | Last Updated : 23rd October 2020 02:04 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை கொடுங்கையூரில், மினி லாரியில் கடத்தப்பட்ட 2 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
கொடுங்கையூா் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் வந்த ஒரு மினி லாரியை மறித்து, போலீஸாா் சோதனையிட்டனா். இச் சோதனையில் அந்த லாரியில் கடத்திக் கொண்டு வரப்பட்டிருந்த 2 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக அந்த மினி லாரியில் வந்த வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த பன்னீா்செல்வம் (30) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.
அதில், வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் அந்த ரேசன் அரிசியை வாங்கி பதுக்கி, ஆந்திர மாநிலத்துக்குக் கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.