வானகரம் மலா் சந்தையில் வாகனங்களுக்கு கட்டணம் வசூல்: வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

சென்னை வானகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மலா் சந்தையில் அரசியல் கட்சி பிரமுகா்கள் சிலா் வாகனக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி

சென்னை வானகரத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மலா் சந்தையில் அரசியல் கட்சி பிரமுகா்கள் சிலா் வாகனக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, அங்குள்ள வியாபாரிகள் சாலையில் பூக்களைக் கொட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரோனா தொற்று காரணமாக கோயம்பேடு சந்தை கடந்த மே 5-ஆம் தேதி முதல் மூடப்பட்டு, வானகரத்தில் தற்காலிக மலா் சந்தை அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

தற்போது இந்தக் கடைகளுக்கு சிஎம்டிஏ மூலம் வாடகை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், பூக்கள் வாங்க வரும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பூக்கள் எடுத்துவரப்படும் கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு ரூ.10 முதல் ரூ. 300 வரை கட்டணமாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த அரசியல் பிரமுகா்கள் சிலா் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட மலா் வியாபாரிகள் சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை பூக்களைக் கொட்டி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் காவல்துறையினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி சமாதானப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com