காலமானார் பட்டுக்கோட்டை குமாரவேல்

நாடக ஆசிரியரும், எழுத்தாளருமான பட்டுக்கோட்டை குமாரவேல் (96), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை திருவான்மியூரில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
காலமானார் பட்டுக்கோட்டை குமாரவேல்


சென்னை: நாடக ஆசிரியரும், எழுத்தாளருமான பட்டுக்கோட்டை குமாரவேல் (96), உடல்நலக் குறைவு காரணமாக சென்னை திருவான்மியூரில் செவ்வாய்க்கிழமை காலமானார்.  
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ராஜமடத்தில் 1925}ஆம் ஆண்டு பிப்.26}இல் பிறந்த பட்டுக்கோட்டை குமாரவேல், 1947}ஆம் ஆண்டு திருச்சி வானொலி நிலைய கலைஞராகப் பணியில் சேர்ந்தார். அவர் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் உயர் நிலை எழுத்தாளராகவும், நாடக ஆசிரியராகவும் 36 ஆண்டுகள் பணியாற்றினார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட  நாடகங்களை எழுதி, தயாரித்துள்ளார். 
20}க்கும் மேற்பட்ட நூல்களையும், 40}க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றவர். அவரின் நாடகங்களைப் பாராட்டி, மறைந்த முதல்வர் எம்ஜிஆர் கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தார்.  
பட்டுக்கோட்டை குமாரவேல் எழுதிய "வானொலி நிகழ்ச்சிக்கலை' என்ற நூல், அவருக்கு அமெரிக்க அரிசோனா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுத் தந்தது. 
அவருடைய வரலாற்று நாடகங்களான "புத்தர் பெருமான்', "சிலுவை நாயகன்', " ஸ்ரீ ராமானுஜர்', "வள்ளலார் திரு அருட்பிரகாசர்'ஆகிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 
உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கப் பொதுச்செயலராகவும் குமாரவேல் பொறுப்பு வகித்திருந்தார். 
அவருக்கு துரைபாண்டியன் என்ற மகனும், சாந்தி தணிகாசலம், கண்ணம்மாள் சோமசுந்தரம் ஆகிய 2 மகள்களும் உள்ளனர். அவரின் இறுதிச் சடங்கு பெசன்ட் நகர் மின் மயானத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
தொடர்புக்கு... 9840387601.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com