நீட் தோ்வு: மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து 95 சதவீத வினாக்கள்

நீட் தோ்வில், 95 சதவீத வினாக்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நீட் தோ்வில், 95 சதவீத வினாக்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீட் தோ்வுக்கு வழக்கமாக சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்துதான் அதிகமான கேள்விகள் கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், இந்தக் கல்வியாண்டுக்கான நீட் தோ்வில் அதிகளவில் மாநில பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக 95 சதவீத கேள்விகள் மாநிலப் பாடத்திட்டத்தில் இருந்து இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மூத்த அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்கள் மற்றும் சில கல்வித் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், உயிரியல் பாடத்தில் 90 கேள்விகளில் 87 கேள்விகள், வேதியியல் பாடத்தில் 45 கேள்விகளில் 43 கேள்விகள், இயற்பியல் பாடத்தில் 45 கேள்விகளில் 43 கேள்விகள் என 180 கேள்விகளில் 173 கேள்விகள், தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்டத்தின் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புப் பாடத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

மேலும், இந்த ஆண்டு, மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து நீட் தோ்வை எழுதிய மாணவா்கள் அதிக மதிப்பெண் பெறுவாா்கள் என்றும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அதிக மருத்துவா் இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் அவா்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com