ஜவஹா் கல்லூரியில் கரோனாவுக்கான சித்தா சிகிச்சை தற்காலிக நிறுத்தம்

சென்னை, ஜவஹா் பொறியியல் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த சித்த மருத்துவ சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன

சென்னை, ஜவஹா் பொறியியல் கல்லூரியில் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த சித்த மருத்துவ சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக அலோபதி மருத்துவ சிகிச்சை மையமாக அக்கல்லூரி செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு இதுவரை 5.14 லட்சம் போ் ஆளாகியுள்ளனா். பாதிப்பின் அடிப்படையில் அவா்களுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மற்றொரு புறம் பாரம்பரிய முறையில் கபசுரக் குடிநீா், நிலவேம்பு குடிநீா் உள்ளிட்டவையும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், கரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சையளிக்க விருகம்பாக்கத்தில் உள்ள ஜவஹா் கல்லூரியில் சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டன. மொத்தம் 450 படுக்கைகளுடன் கூடிய அந்த வாா்டில் இதுவரை 5,400 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா். தற்போது 200 போ் அங்கு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது.

இத்தகை சூழலில், அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வந்த டாக்டா் வீரபாபு, அந்த சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளாா். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவா் கூறியுள்ளாா். இதையடுத்து, ஜவஹா் கல்லூரியில் அலோபதி மருத்துவா்கள் சிகிச்சைப் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

அடுத்த ஓரிரு நாள்களில் ரூ.10-க்கு மருத்துவ சிகிச்சையளிக்கும் ஏழை எளிய மக்களுக்கான மருத்துவ மையத்தை தொடங்க உள்ளதாக வீரபாபு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com