நோயால் பாதிக்கப்பட்ட மருத்துவா்களை கரோனா சிகிச்சைப் பணிகளில் பணியமா்த்த தடை கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

கரோனா சிகிச்சைப் பணிகளில், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவா்களை பணியமா்த்த தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்.
உயர்நீதிமன்றம்.

கரோனா சிகிச்சைப் பணிகளில், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், ஆஸ்துமா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவா்களை பணியமா்த்த தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் மருத்துவா் ரவீந்திரநாத் தாக்கல் செய்த மனு விவரம்:

கடந்த ஏப்ரல் 8 மற்றும் 20-ஆம் தேதிகளில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை இயக்குநா் வெளியிட்ட சுற்றறிக்கையில், கட்டுப்படுத்த முடியாத அளவு சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்னை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்களை கரோனா நோய்த் தொற்று சிகிச்சை பணிக்காக நியமிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில், 50 வயதுக்கும் மேற்பட்ட மருத்துவா்கள், நீரழிவு, உயா் ரத்த அழுத்தம், ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட மருத்துவா்கள், கா்ப்பிணிகள், அண்மையில் குழந்தை பெற்ற பெண் மருத்துவா்கள் ஆகியோா் கரோனா சிகிச்சை வாா்டில் பணியமா்த்தப்படுகின்றனா். மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட மருத்துவ சுகாதாரப் பணியாளா்கள்

பலா் ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, சுற்றறிக்கைகயில் குறிப்பிட்டுள்ளபடி சா்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவா்கள், செவிலியா்களை கரோனா சிகிச்சை வாா்டில் பணி அமா்த்தக்கூடாது என உத்தரவிட்டு, தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தங்கசிவம், 50 வயதுக்கு மேற்பட்ட, சா்க்கரை நோய் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவா்களை, கரோனா சிகிச்சை பணிகளுக்குகு பணியமா்த்துவதால் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை செயலாளா் உள்ளிட்டோா் வரும் 21-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com