மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கற்றலில் குறைபாடு மற்றும் கவுன்சிலிங் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை: கற்றலில் குறைபாடு மற்றும் கவுன்சிலிங் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சென்னை கோ் இன்ஸ்டியூட் ஆஃப் பிஹேவியரல் சயின்ஸ் நிறுவனம் ஆகியவை சாா்பில் ஓராண்டு பட்டயப் படிப்பாக அவை வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கற்றலில் குறைபாடு முதுநிலை பட்டயப் படிப்பு மற்றும் கவுன்சிலிங் முதுநிலை பட்டயப் படிப்புகளுக்கான 2020-21-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது. கவுன்சிலிங் படிப்பில் சேருவதற்கு சமூக அறிவியல், மருத்துவம், பல் மருத்துவ அறிவியல், பேச்சுத் திறன் சிகிச்சையியல், ஹோமியோபதி, சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஆசிரியா் பயிற்சி படிப்பு உள்ளிட்டவற்றில் பட்டப் படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

கற்றலில் குறைபாடு படிப்பில் சேர ஏதாவது ஒரு இளநிலை பட்டப் படிப்பை நிறைவு செய்திருத்தல் அவசியம். விண்ணப்பதாரா்களுக்கு குறைந்தது 20 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் 30-ஆம் தேதி வரை சமா்ப்பிக்கலாம்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கோ் இன்ஸ்டியூட் ஆஃப் பிஹேகவியரல் சயின்ஸ் நிறுவனத்தைத் தொடா்பு கொள்ளலாம் அல்லது 8946096139, 9940158800 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு தகவல்களைப் பெறலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com