போலி ஜி.எஸ்.டி. ரசீது தயாரித்து  ரூ.107 கோடி மோசடி: ஒருவர் கைது

போலி ஜி.எஸ்.டி.  ரசீது தயாரித்து, ரூ.107 கோடி மோசடி செய்தது தொடர்பாக சென்னைகொடுங்கையூரைச் சேர்ந்த ஒருவர், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். 

சென்னை: போலி ஜி.எஸ்.டி.  ரசீது தயாரித்து, ரூ.107 கோடி மோசடி செய்தது தொடர்பாக சென்னைகொடுங்கையூரைச் சேர்ந்த ஒருவர், செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். 
இது தொடர்பாக சென்னை சரக்கு, சேவை வரி மற்றும் கலால் வரித்துறை முதன்மை ஆணையர் ரவீந்திரநாத் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ஒரு நபர், ஜி.எஸ்.டி. வரிச்சலுகை பெறுவதற்காக, போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் பெயரில், ரசீதுகள் தயாரித்து வழங்கி உள்ளார். உண்மையான பொருள்களை விநியோகம் செய்யாமல், போலி ரசீது தயாரித்து, வரிச் சலுகை பெற முயற்சித்துள்ளார். இதன்மூலம் ரூ.740 கோடிக்கு, போலி ரசீதுகள் உருவாக்கப்பட்டு, ரூ.107 கோடிக்கு வரிச்சலுகை பெற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, தற்போது செப்.29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com