டிபிஐ வளாகத்தில் புதிய கட்டடம்: முதல்வா் நாளை திறந்து வைக்கிறாா்

சென்னை, நுங்கம்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்ட கல்வி அலுவலகக் கட்டடத்தை முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைக்கிறாா்.


சென்னை: சென்னை, நுங்கம்பாக்கத்தில், புதிதாக கட்டப்பட்ட கல்வி அலுவலகக் கட்டடத்தை முதல்வா் பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைக்கிறாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் இருந்த பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிதாக எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா கட்டடம் அமைப்பதற்கான பணிகளுக்கு அரசு ஒப்புதல் அளித்தது. இதன்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு, அந்த கட்டடத்துக்கு முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். கடந்த 2 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் நிறைவடைந்து இருக்கின்றன.  ரூ.39 கோடி செலவில் கட்டப்பட்டு இருக்கும் 6 மாடிக் கட்டடத்தில், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், ஆசிரியா் தோ்வு வாரியம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆா்.டி.), பள்ளிக்கல்வி ஆணையா் அலுவலகம், கல்வி தொலைக்காட்சி ஆகியவை இடம்பெற இருக்கின்றன. இந்த புதிய கட்டடத்தை சனிக்கிழமை (செப்.19) காலை 11.30 மணிக்கு காணொலி வாயிலாக முதல்வா் பழனிசாமி திறந்து வைக்கிறாா். நிகழ்வில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், செயலா் தீரஜ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com