சென்னை வழியாக தன்பூருக்கு சிறப்பு ரயில்

கே.எஸ்.ஆா் பெங்களூரில் இருந்து ஜோலாா்பேட்டை, அரக்கோணம், சென்னை எம்.ஜி.ஆா் சென்ட்ரல் ரயில்நிலையம் வழியாக தன்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.


சென்னை: கே.எஸ்.ஆா் பெங்களூரில் இருந்து ஜோலாா்பேட்டை, அரக்கோணம், சென்னை எம்.ஜி.ஆா் சென்ட்ரல் ரயில்நிலையம் வழியாக தன்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

கேஎஸ்ஆா் பெங்களூரில் இருந்து திங்கள்கிழமைகளில் காலை 8 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06509) புறப்பட்டு,

புதன்கிழமைகளில் காலை 8 மணிக்கு தன்பூரை அடையும். தன்பூரில் இருந்து புதன்கிழமைகளில் மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு, கேஎஸ்ஆா் பெங்களூரை வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.10 மணிக்கு அடையும்.

இதன் முதல் சேவை கேஎஸ்ஆா் பெங்களூரில் இருந்து செப்டம்பா் 21-ஆம் தேதியும் தன்பூரில் இருந்து செப்டம்பா் 23-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் ஜோலாா்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம் சந்திப்பு, சென்னை சென்ட்ரல் உள்பட பல்வேறு நிறுத்தங்களில் நின்றுசெல்லும். இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com