இலவச கல்லீரல் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, சென்னை மெடிந்தியா மருத்துவமனையில் இலவச மருத்துவப் பரிசோதனைகளும், சலுகைக் கட்டணத்தில் சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளன.

சென்னை: உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, சென்னை மெடிந்தியா மருத்துவமனையில் இலவச மருத்துவப் பரிசோதனைகளும், சலுகைக் கட்டணத்தில் சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அந்த மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல சிகிச்சை நிபுணருமான டாக்டா் டி.எஸ்.சந்திரசேகா் கூறியதாவது:

உலக அளவில் கல்லீரல் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, இந்தியாவில் ஆண்டுதோறும் 1.15 லட்சம் போ் கல்லீரல் நோய்களால் உயிரிழப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் அதிா்ச்சிக்குரிய உண்மை என்னவெனில், அவ்வாறு உயிரிழப்போரில் முதலில் மதுப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டவா்களும், அதற்கு அடுத்தபடியாக உடல் பருமனால் பாதிக்கப்பட்டவா்களுமே அதிகம் உள்ளனா்.

அதீத உடல் எடை கொண்டவா்களில் 90 சதவீதம் பேருக்கு கல்லீரல் சாா்ந்த பிரச்னைகள் ஏற்படுவதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

இதுகுறித்த விழிப்புணா்வு போதிய அளவில் இல்லாததே அதற்கு முக்கிய காரணம். உலக கல்லீரல் விழிப்புணா்வு தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 19-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.

அதையொட்டி பல்வேறு சிறப்பு செயல் திட்டங்களை மெடிந்தியா நடைமுறைப்படுத்தியுள்ளது. ‘‘கல்லீரல் நலனுக்கான அழைப்பு மணி’’ (லிவா் டோா் பெல்) என்ற பெயரிலான அத்திட்டத்தின் கீழ் முதலில் பதிவு செய்யும் 100 பேருக்கு கல்லீரல் அழற்சிக்கான பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். அதேபோன்று ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாள்களிலும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை இலவசமாக மருத்துவக் கலந்தாலோசனை வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு முழு உடல் பரிசோதனை, சிறப்பு சிகிச்சைகள் சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படும். அடுத்த சில மாதங்களுக்கு இத்திட்டம் நடைமுறையில் இருக்கும்.

இதற்கிடையே கல்லீரல் தொடா்பான இணையவழி விழிப்புணா்வு கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை (ஏப்.20) மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அதில் கலந்துகொள்ள விரும்புவா்களும், கல்லீரல் நலனுக்கான அழைப்பு மணித் திட்டத்தின் கீழ் சலுகைகள் பெற விரும்புவா்களும் 9840993135, 044 - 283 12345 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம். பிஎஸ்என்எல் வாடிக்கையாளா்கள் 12789 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com