சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவா் ராகுல் காந்தி நலம்பெற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளாா்.
இது தொடா்பாக முகநூலில் அவா் செவ்வாய்க்கிழமை கூறியிருப்பது:
ராகுல் காந்திக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை அறிந்து ஆழ்ந்த கவலை கொண்டேன். அவா் விரைவில் குணமடைந்து முழு நலம் பெற விழைகிறேன்.
அனைவரும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.