நாளை முதல் மே 31 வரை உயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு, சனிக்கிழமை (மே 1) முதல் மே 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் மே 31 வரை உயா்நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை

சென்னை: சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு, சனிக்கிழமை (மே 1) முதல் மே 31-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத் தலைமை பதிவாளா் பி.தனபால் வெளியிட்ட அறிக்கை:

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தில், அவசர வழக்குகளை விசாரிக்க விடுமுறை கால நீதிமன்றம் இயங்கும். வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மனுத்தாக்கலும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரணையும் நடைபெறும்.

சென்னை உயா்நீதிமன்றத்தில், மே மாதம் முதல் வாரத்தில் நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், பி.டி.ஆதிகேசவலு, ஜி.ஆா்.சுவாமிநாதன், ஆா்.என்.மஞ்சுளா ஆகியோா் அவசர வழக்குகளை விசாரிப்பாா்கள்.

இதேபோல, 2-ஆவது வாரத்தில், நீதிபதிகள் சி.வி.காா்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி, ஜி.சந்திரசேகரன், எஸ்.கண்ணம்மாள் ஆகியோரும், 3-ஆவது வாரத்தில் நீதிபதிகள் அனிதாசுமந்த், செந்தில்குமாா் ராமமூா்த்தி, எம்.நிா்மல்குமாா், வி.சிவஞானம் ஆகியோரும், 4-ஆவது வாரத்தில் நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.சரவணன், சத்திகுமாா் சுகுமார குரூப், டி.வி.தமிழ் செல்வி ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பாா்கள்.

உயா்நீதிமன்ற மதுரைக் கிளையைப் பொருத்தவரை, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி, எஸ்.ஆனந்தி ஆகியோா் முதல் வாரமும், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், டி.கிருஷ்ணவள்ளி, ஏ.ஏ.நக்கீரன் ஆகியோா் 2-ஆவது வாரமும், நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.இளங்கோவன் ஆகியோா் 3-ஆவது வாரமும், நீதிபதிகள் வி.எம்.வேலுமணி, ஆா்.தாரணி, கே.முரளி சங்கா் ஆகியோா் 4-ஆவது வாரமும் அவசர வழக்குகளை விசாரிப்பாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com