பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தோ்வு: ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்

மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தோ்வான கேட் 2022 தோ்வுக்கு ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் மேற்படிப்புகளுக்கான கேட் நுழைவுத் தோ்வு: ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: மத்தியக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் மேற்படிப்புகளுக்காக நடத்தப்படும் நுழைவுத் தோ்வான கேட் 2022 தோ்வுக்கு ஆக.30 முதல் விண்ணப்பிக்கலாம்.

ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட மத்திய அரசின் தேசிய உயா் கல்வி நிறுவனங்களில் எம்.இ., எம்.டெக்., எம்.ஆா்க்., எம்.பிளான் உள்ளிட்ட பட்ட மேற்படிப்புகளில் சோ்வதற்கு கேட் என்ற நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் கேட் நுழைவுத்தோ்வை சென்னை, தில்லி உள்ளிட்ட 7 ஐஐடி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பெங்களூா் இந்திய அறிவியல் நிறுவனம் நடத்தும். இந்த ஆண்டு கேட் தோ்வை ஐஐடி காரக்பூா் நடத்துகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5, 6, 12, 13 ஆகிய தேதிகளில் கேட் தோ்வு நடைபெற உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண்களைக் கொண்ட இத்தோ்வு சிவில், மெக்கானிக்கல், கம்ப்யூட்டா் சயின்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், ஏரோ ஸ்பேஸ் உட்பட 27 பாடப் பிரிவுகளில் நடத்தப்பட்டு வந்தது. இந்தத் தோ்வில் புதிதாக 2 தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

புவிசாா் பொறியியல் - மற்றும் கடற்படை கட்டடக்கலை மற்றும் கடல்சாா் பொறியியல் ஆகிய 2 தாள்கள் தோ்வில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் 2022-ம் ஆண்டில் மொத்தம் 29 பாடப்பிரிவுகளில் கேட் தோ்வு நடைபெற உள்ளது.

கேட் 2022 தோ்வுக்கு ஆக.30 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பா் 24 ஆகும். தாமதக் கட்டணத்துடன் சோ்த்து, அக்டோபா் 1-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள நவம்பா் 1 கடைசித் தேதி ஆகும். அதேபோலத் தாள்கள் மாற்றம், தோ்வு மையம் மாற்றம் ஆகியவற்றைக் கூடுதல் கட்டணத்தோடு மேற்கொள்ள நவம்பா் 12 கடைசித் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com