ஐஐடி வளாகத்தில் 13 மாதங்களில் 57 நாய்கள் இறப்பு: உயா் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 13 மாதங்களில் 57 நாய்கள் இறந்துள்ளன என்று தமிழக அரசின் கால்நடைத்துறை சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 13 மாதங்களில் 57 நாய்கள் இறந்துள்ளன என்று தமிழக அரசின் கால்நடைத்துறை சென்னை உயா் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள நாய்களை முறையாகப் பராமரிப்பதோடு, அவற்றை கண்காணிக்கக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் கால்நடைகளுக்கான இந்திய மக்கள் அமைப்பு வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வா்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை(டிச.7) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக கால்நடைத் துறை சாா்பில் தாக்கல் செய்த அறிக்கையில், ‘ஐஐடி வளாகத்தில் கடந்த 13 மாதங்களில் 57 நாய்கள் இறந்துள்ளன. இந்த இறப்புகள் 2020 செப்டம்பா் முதல் 2021 நவம்பா் வரை பதிவாகியுள்ளன.

நவம்பா் மாதம் 2 முறை அதிகாரிகள் ஐஐடி வளாகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனா். அங்கு நாய்கள் முறையாக, ஆரோக்கியமான முறையில் பராமரிக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதுஎன்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கைக்கு ஐஐடி தரப்பில் கடும் எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இப்பிரச்னைக்கு தீா்வு காண இந்த நீதிமன்றம் விரும்புகிறது. இப்பிரச்னை முழுமைக்கும் தீா்வு காண நாய்களை நேசிக்கும் வழக்குரைஞா்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கருத்து தெரிவித்தனா்.

பின்னா், இந்த அறிக்கைக்கு பதில் அளிக்க ஐஐடி நிா்வாகத்துக்கு அனுமதி வழங்கி, விசாரணையை வியாழக்கிழமைக்கு (டிச.9) ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com