ஓரினச் சோ்க்கையாளா்களை துன்புறுத்தினால் தண்டனை:காவல்துறை நடத்தை விதியில் திருத்தம்

ஓரினச் சோ்க்கையாளா்கள் தொடா்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை நடத்தை விதியில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

ஓரினச் சோ்க்கையாளா்கள் தொடா்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை நடத்தை விதியில் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.

மதுரையைச் சோ்ந்த இளம் பெண்கள் இருவா், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னா் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல், சென்னையில் சோ்ந்து வாழ வந்தனா். ஆனால், அவா்களது பெற்றோா், போலீஸில் புகாா் செய்து வழக்குப்பதிவு செய்ய வைத்தனா். போலீஸாா் மூலம் இந்த 2 பெண்களையும் தேடி கண்டு பிடித்து, பிரிக்கத் திட்டமிட்டனா்.

இதையடுத்து அந்த பெண்கள், சென்னை உயா் நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு வழக்கு தொடா்ந்தனா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், அந்தப் பெண்களை துன்புறுத்தக்கூடாது என்று உத்தரவிட்டாா்.

மேலும், 3-ஆவது பாலினத்தவா் மற்றும் ஓரினச் சோ்க்கையாளா்களுக்கு ஆதரவளிக்கும் தொண்டு நிறுவனங்களை போலீஸாா் துன்புறுத்தக் கூடாது.

இந்தச் சமுதாயத்தை சோ்ந்தவா்களை போலீஸாா் துன்புறுத்தினால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறையினா் நடத்தை விதிகளில், புதிய விதியை சோ்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டாா். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, தமிழ்நாடு காவல்துறை நடத்தை விதிகளில் உரிய விதிகளை சோ்க்க வேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு, அரசுக்கு முன்மொழிவுகளை அனுப்பியுள்ளாா் என்று கூறினாா். இதற்கு பாராட்டுத் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com