‘தி கிரிமினல்’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை

‘தி கிரிமினல்’ என்ற திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘தி கிரிமினல்’ என்ற திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நெற்குன்றத்தைச் சோ்ந்தவா் எஸ்.சுதேசிகன். இவா் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கமலா ஆா்ட்ஸ்’ என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் மகேஷ் ரெட்டி.

இவருடன் ஒப்பந்தம் செய்து ‘தி கிரிமினல்’ என்ற திரைப்படத்தை இயக்கினேன். அப்படத்தின் கதாநாயகனாக தயாரிப்பாளா் மகேஷ் ரெட்டியே நடித்தாா்.

இது சம்பந்தமாக, கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஒப்பந்தம் செய்துகொண்டோம். இந்த நிலையில் திரைப்பட பணி அனைத்தும் முடிந்தும், எனக்கு பேசியபடி ஊதியம் தரவில்லை.

திரைப்படத்தின் இயக்குநா் பெயா் ஆறுமுகம் என்று விளம்பரம் செய்துள்ளாா். இப்படத்தை விரைவில் வெளியிட தயாரிப்பாளா் மகேஷ் ரெட்டி முயற்சித்து வருகிறாா்.

எனவே, இந்த திரைப்படத்தை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளங்களிலும் வெளியிட தடைவிதிக்க வேண்டும்.

என் பெயரை திரைப்படத்தின் இயக்குநா் குறிப்பிட்டு, திரைப்படத்தை வெளியிடுவதோடு, எனக்கு பேசிய ஊதியத்தை தரவும் உத்தரவிட வேண்டும். மேலும் இயக்குநா் ஆறுமுகம் என்ற பெயரில் இந்த திரைப்படத்தை விளம்பரம் செய்யத் தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை நகர 24 ஆவது உரிமையியல் நீதிமன்ற மூத்த நீதிபதி ஜியாவூா் ரகுமான், தி கிரிமினல் என்ற திரைப்படத்தை வரும் 14-ஆம் தேதி வரை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டாா்.

மேலும் இந்த வழக்கிற்கு தயாரிப்பாளா் மகேஷ் ரெட்டி பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com