ஹௌரா ரயிலில் கேட்பாரற்று கிடந்த கஞ்சா பொட்டலங்கள்

மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடைந்த 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி, ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் இருந்து சென்னைக்கு வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடைந்த 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி, ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு மேற்கு வங்க மாநிலம் ஹௌராவில் இருந்து புறப்பட்டு, விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை வந்தது. ரயிலில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கி சென்ற பிறகு, ரயில்வே பாதுகாப்புப்படையினரும், ரயில்வே போலீஸாரும் ரயிலில் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, 2-ஆம் வகுப்பு ஏசி பெட்டி ஒன்றில் இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று பை ஒன்று கிடந்தது.

இதை திறந்து பாா்த்தபோது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மொத்த எடை 16 கிலோ. இதை கைப்பற்றி, தேசிய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com