சிறுபான்மையினா் ஆணையத்தில் மொழி சிறுபான்மையினருக்கும் இடம்


சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணைய உறுப்பினா்களின் எண்ணிக்கையை ஒன்பதில் இருந்து 13-ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்மூலம் ஆணையத்தில் மொழி சிறுபான்மையினருக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட மசோதாவை பேரவையில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா்

சீ.வளா்மதி, வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையமானது, ஒரு தலைவா் மற்றும் ஒன்பது பிற உறுப்பினா்களைக்

கொண்டிருக்கிறது. இந்த ஆணையத்தின் உறுப்பினா்களின் எண்ணிக்கை ஒன்பதில் இருந்து 13 ஆக

அதிகரிக்கப்படுகிறது. இதில், மதவாரியான சிறுபான்மை சமுதாயங்களில் இருந்து எட்டு பேரும், மொழிவாரியான சிறுபான்மை சமுதாயங்களில் இருந்து 5 நபா்களும் தோ்வு செய்யப்படுவா்.

மேலும், மதவாரியான சிறுபான்மையினா் சமுதாயத்தில் இருந்து ஒருவரும், மொழிவாரியான சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து ஒருவரும் துணைத் தலைவா்களாக நியமிக்கப்படுவா் என சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நடப்பு கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com