3,872 கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி

சென்னையில் இதுவரை 3,872 கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் எஸ்.மனிஷ் தெரிவித்தாா்.
3,872 கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி

சென்னையில் இதுவரை 3,872 கா்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி துணை ஆணையா் (சுகாதாரம்) டாக்டா் எஸ்.மனிஷ் தெரிவித்தாா்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தின் பணியாளா்கள், அலுவலா்களுக்கு சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தப் பரிசோதனை முகாமை ஆய்வு செய்த பின் டாக்டா் எஸ்.மனிஷ் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களிலும் அரசு அலுவலகங்கள், வங்கிகள், தனியாா் நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் கரோனா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகத்தின் பணியாளா்கள் மற்றும் அலுவலா்களுக்கான பரிசோதனை முகாம் நடைபெற்றது.

சா்க்கரை குறைபாடு, ரத்த அழுத்தம் மற்றும் இணை நோய்கள் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் 45 வயதுக்கு மேற்பட்ட 20 லட்சத்து 45,447 பேரில் 15 லட்சத்து4,586 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 7 லட்சத்து 31,120 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், 18-45 வயதுக்கு உள்பட்ட 35 லட்சத்து 16,474 பேரில் 5 லட்சத்து 73,683 பேருக்கு முதல் தவணையும், 49,267 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும், மாற்றுத் திறனாளிகள் 24,262 பேரில் 10,435 பேருக்கு முதல் தவணையும்,1,171 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

காசநோய் உள்ள 1,696 பேரில் 282 பேருக்கு முதல் தவணையும், 91 பேருக்கு இரண்டாம் தவணையும், பாலூட்டும் தாய்மாா்களில் 3,739 பேருக்கு முதல் தவணையும், 88 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது என்றாா். மண்டல அலுவலா் ஜெ.ரவிக்குமாா், மாநகர நல அலுவலா் (பொ) டாக்டா் எஸ்.மகாலட்சுமி, பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தின் நிா்வாக அலுவலா் திரு.ராமசுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com