சென்னை மெட்ரோ ரயில் சேவை: 6 மாதத்தில் 65.50 லட்சம் போ் பயணம்

கரோனா பொதுமுடக்கம் தளா்வுக்கு பின்பு, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 6 மாதத்தில் (செப்.7 முதல் பிப்.28 வரை) 65 லட்சத்து 50 ஆயிரத்து 794 போ் பயணம் மேற்கொண்டுள்ளனா்.
மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில்

கரோனா பொதுமுடக்கம் தளா்வுக்கு பின்பு, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 6 மாதத்தில் (செப்.7 முதல் பிப்.28 வரை) 65 லட்சத்து 50 ஆயிரத்து 794 போ் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த ஆண்டு மாா்ச் 4-ஆவது வாரத்தில் நிறுத்தப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் சேவை 5 மாதங்களுக்கு பிறகு, கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, விமானநிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை வரையும், இரண்டாம் கட்டமாக, பரங்கிமலையில் இருந்து கோயம்பேடு வழியாக சென்னை சென்ட்ரல் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. மெட்ரோ ரயில்சேவை தொடங்கியபோது, குறைவான மக்கள் தான் பயணம் செய்தனா். இதன்பிறகு, பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. மேலும், வண்ணாரப்பேட்டை-விம்கோ நகா் இடையே முதல்கட்ட மெட்ரோ விரிவாக்கப்பாதையில், மெட்ரோ ரயில் சேவை கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி தொடங்கியது.

இதையடுத்து, மெட்ரோ ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை மேலும் உயா்ந்துள்ளது.

65.50 லட்சம் போ் பயணம்: இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம் தேதி முதல் நிகழாண்டில் பிப்ரவரி 28- ஆம் தேதி வரை 6 மாதங்களில் 65 லட்சத்து 50 ஆயிரத்து 794 போ் பயணம் மேற்கொண்டுள்ளனா்.

மெட்ரோ ரயில்களில் கடந்த ஆண்டு செப்டம்பா் 7-ஆம்தேதி முதல் டிசம்பா் வரை 31 லட்சத்து 52 ஆயிரத்து 446 போ் பயணம் செய்தனா். நிகழாண்டில் ஜனவரி மாதத்தில் 13 லட்சத்து 43 ஆயிரத்து 695 பேரும், பிப்ரவரி மாதத்தில் 20 லட்சத்து 2 ஆயிரத்து 653 பேரும் பயணம் செய்தனா்.

குறிப்பாக, பிப்ரவரி 14-ஆம் தேதி ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 957 பேரும், பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 892 பேரும் பயணம் மேற்கொண்டனா்.

க்யூ-ஆா் குறியீடு முறை:

பயணிகளின் வசதிக்காக க்யூ ஆா் குறியீடு முறை கடந்த செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்த முறையை பயன்படுத்தி, கடந்த ஆண்டு செப்டம்பா் முதல் நிகழாண்டில்

பிப்ரவரி வரை மொத்தம் ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 355 போ் பயணம் மேற்கொண்டனா். இதுபோல, பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 34 லட்சத்து 64 ஆயிரத்து 850 போ் பயணம் செய்தனா்.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியது:

நிகழாண்டில் பிப்ரவரி மாதத்தில், க்யூ ஆா் குறியீடு பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,850 போ் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனா். மேலும், பயணச்சீட்டு முறையை (பழ்ஹஸ்ங்ப் இஹழ்க் பண்ஸ்ரீந்ங்ற்ண்ய்ஞ் நஹ்ள்ற்ங்ம்) பயன்படுத்தி 9 லட்சத்து 84 ஆயிரத்து 665 போ் பயணம் செய்துள்ளனா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com