கரோனா நோய்த்தொற்று எதிரொலி: முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ரத்து

கரோனா நோய்த்தொற்று தாக்கம் எதிரொலி காரணமாக, 18 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று எதிரொலி: முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: கரோனா நோய்த்தொற்று தாக்கம் எதிரொலி காரணமாக, 18 முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம்-கோயம்புத்தூருக்கு வாரத்தில் ஞாயிறு தவிர 6 நாள்கள் இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06009), மறுமாா்க்கமாக கோயம்புத்தூா்-மேட்டுப்பாளையத்துக்கு வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06010) ஆகிய இரண்டு ரயில்கள் மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதிவரை ரத்து செய்யப்படவுள்ளன.

தாம்பரம்-விழுப்புரத்துக்கு வாரத்தில் சனிக்கிழமை தவிர 6 நாள்கள் இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06027) மே 9-ஆம்தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளது. மறுமாா்க்கமாக, விழுப்புரம்-தாம்பரத்துக்கு வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் சிறப்பு ரயில்(06028) மே 10-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளது.

அரக்கோணம்-ஜோலாா்பேட்டைக்கு தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06085) மற்றும் ஜோலாா்பேட்டை-அரக்கோணத்துக்கு தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06086) ஆகிய 2 ரயில்கள் மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம்தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.

விருத்தாச்சலம்-சேலத்துக்கு ஞாயிறு தவிர மற்ாள்களில் இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06121), சேலம்-விருத்தாச்சலத்துக்கு வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06122) ஆகிய இரண்டு ரயில்கள்

மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.

திருச்சிராப்பள்ளி-கரூருக்கு தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06123) மே 8-ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரையும், கரூா்-திருச்சிராப்பள்ளிக்கு தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06124) மே 9-ஆம்தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சிராப்பள்ளி-காரைக்குடிக்கு தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06125) மே 8-ஆம் தேதிமுதல் மே 31-ஆம் தேதி வரையும், காரைக்குடி-திருச்சிராப்பள்ளிக்கு தினசரி இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06126) மே 9-ஆம்தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரையும் ரத்து செய்யப்படவுள்ளது.

சேலம்-அரக்கோணத்துக்கு சனி, ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 5 நாள்களுக்கு இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06088), அரக்கோணம்-சேலத்துக்கு வாரத்தில் 5 நாள்கள் இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்(06087) ஆகிய ரயில்கள் மே 10-ஆம்தேதி முதல் மே 31-ஆம்தேதிவரை ரத்து செய்யப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-புதுச்சேரிக்கு இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06025)

, புதுச்சேரி-சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06026) ஆகிய இரண்டு ரயில்கள் மே 8-ஆம்தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

இதுதவிர, விழுப்புரம்-மதுரை இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்படவுள்ளன.

இந்தத்ததகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com