மே 23 வரை ஐ.சி.எஃப் தொழிற்சாலை செயல்படாது

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலை வரும் மே 23-ஆம் தேதி வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க தமிழகத்தில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலை வரும் மே 23-ஆம் தேதி வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டித் தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற இணைப்புப் பெட்டி தொழிற்சாலை (ஐ.சி.எஃப்ஃ சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இங்கு தயாரிக்கப்படும் ரயில் பெட்டிகள் இந்திய ரயில் போக்குவரத்துக்கு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பயணிகளின் தேவை மற்றும் காலத்துக்கு ஏற்றவாறு அதிநவீன பெட்டி, சுற்றுலா, ராணுவத்துக்கான ரயில்பெட்டி உள்பட 50 வகைகளில் 600 வடிவமைப்புகளில் இங்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கிடையில், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக ரயில்பெட்டி தயாரிப்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கடந்த சில மாதங்களாக 75 சதவீத ஊழியா்களைக் கொண்டு ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில், சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலை திங்கள்கிழமை (மே 10) முதல் மே 23-ஆம் தேதி வரை வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, திங்கள்கிழமை முதல் 24-ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, ஐ.சி.எஃப் தொழிற்சாலை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com