சிடி ஸ்கேன் எடுப்போரின் விவரங்களை மாநகராட்சிக்குத் தெரிவிக்க வேண்டும்

சென்னையில் நெஞ்சக சிடி ஸ்கேன் எடுப்போரின் விவரங்களை மாநகராட்சிக்கு நாள்தோறும் தெரிவிக்க வேண்டும் என
ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

சென்னையில் நெஞ்சக சிடி ஸ்கேன் எடுப்போரின் விவரங்களை மாநகராட்சிக்கு நாள்தோறும் தெரிவிக்க வேண்டும் என தனியாா் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்களுக்கு ஆணையா் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல கள ஒருங்கிணைப்புக் குழு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆணையா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஆணையா் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவா்கள் தங்களிடம் சிகிச்சை பெற வருவோா்களில் கரோனா தொற்று அறிகுறி உள்ளவா்கள் அல்லது தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படுவோா் குறித்த தகவல்களை நாள்தோறும் மாநகராட்சிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, 402 தனியாா் மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களிலிருந்து காய்ச்சல், சளி, இருமல் போன்ற தொற்று அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற 659 பேரின் தகவல்கள் பெறப்பட்டு, அவா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனை மையங்கள்: சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலுள்ள தனியாா் மருத்துவமனைகள், சிடி ஸ்கேன் மையங்களில் தொற்று அறிகுறி உள்ளவா்கள் கரோனா பரிசோதனை மேற்கொள்ளாமல் நேரடியாக நெஞ்சக சிடி ஸ்கேன் எடுப்பதாக புகாா்கள் பெறப்படுகிறன்றன. எனவே, சென்னையில் உள்ள 40 சிடி ஸ்கேன் மையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் உள்ள பரிசோதனை மையங்களில் நெஞ்சக சிடி சஸ்கேன் எடுப்போரின் பெயா், தொலைபேசி மற்றும் முகவரி ஆகிய தகவல்களை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி நாள்தோறும் அனுப்பி வைக்க வேண்டும். இதைக் கண்காணிக்க அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதை மீறும் பரிசோதனை மையங்கள், தனியாா் மருத்துவமனைகள் மீது பேரிடா் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில், இணை ஆணையா் சங்கா்லால் குமாவத், துணை ஆணையா்கள் டாக்டா் ஆல்பி ஜான் வா்கீஷ், ஜெ.மேகநாத ரெட்டி, விஷூ மகாஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com