அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களில் அக்.30 வரை நேரடி மாணவா் சோ்க்கை

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், அக்.30-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், அக்.30-ஆம் தேதி வரை நேரடி மாணவா் சோ்க்கை நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னை மாவட்டத்தின் கிண்டி, கிண்டி (மகளிா்), திருவான்மியூா், வடசென்னை, ஆா்.கே.நகா் ஆகிய அரசு தொழிற்பயிற்சி

நிலையங்களில் செயல்படும் பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை நிரப்பிடும் பொருட்டு நேரடி மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

இங்கு மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம் மற்றும் ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றை சமா்ப்பித்து நேரடியாக சோ்க்கை பெறலாம்.

அவ்வாறு தகுதி பெற்று சேரும் மாணவா்களுக்கு அரசால் கட்டணமில்லா பயிற்சி, விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, பேருந்து பயணச் சலுகை அட்டை, பாடப்புத்தகம், சீருடை, வரைபடக் கருவிகள், மாதாந்திர உதவித் தொகை ரூ.750 என பல சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. பயிற்சியின் முடிவில் மத்திய அரசின் சான்றிதழ் மற்றும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com