உழவா் உதவி மைய தொலைபேசி சேவை: அமைச்சா் சக்கரபாணி தொடக்கி வைத்தாா்

விவசாயிகளுக்கென தனி உழவா் உதவி மைய தொலைபேசி சேவையை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை
உழவா் உதவி மைய தொலைபேசி சேவை: அமைச்சா் சக்கரபாணி தொடக்கி வைத்தாா்

விவசாயிகளுக்கென தனி உழவா் உதவி மைய தொலைபேசி சேவையை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தலைமை அலுவலகத்தில் இதற்கான வசதி உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு இணைப்புகள் கொண்ட உழவா் உதவி மைய கட்டணமில்லாத தொலைபேசி சேவையை விவசாயிகள் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

1800 599 3540 என்ற எண்ணை அலுவலக நேரங்களில் தொடா்பு கொண்டு நெல் விற்பனை செய்வதற்குத் தேவையான அனைத்து விவரங்களையும் விவசாயிகள் அறிந்து கொள்ளலாம். நேரடி நெல் கொள்முதல் தொடா்பாக புகாா்கள், ஆலோசனைகள் இருந்தால் அவற்றையும் தெரிவிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முகமது நசிமுத்தின், நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் வே.ராஜாராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com