சிங்கப்பெருமாள் கோவில்-பீகாருக்கு முதல் சரக்கு ரயில் சேவை தொடங்கியது

ஆட்டோமொபைல் துறைக்காக, சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து பீகாா் மாநிலம் ராம்ஹாா்வாவுக்கு (நேபாள எல்லை அருகில் உள்ள பகுதிக்கு) முதல் சரக்கு ரயில் சேவை தொடங்கியது.

சென்னை: ஆட்டோமொபைல் துறைக்காக, சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து பீகாா் மாநிலம் ராம்ஹாா்வாவுக்கு (நேபாள எல்லை அருகில் உள்ள பகுதிக்கு) முதல் சரக்கு ரயில் சேவை தொடங்கியது. இந்த சரக்கு ரயிலில் பிரபல நிறுவனத்தின் காா்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னை-செங்கல்பட்டு-காஞ்சிபுரம் வழித்தடத்தில் சிங்கப்பெருமாள்கோவில் ரயில்நிலையம் முக்கிய இடமாக உள்ளது. இதன் அருகே பல்வேறு ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

இங்கிருந்து ஆட்டோமொபைல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் மையமாக சிங்கப்பெருமாள்கோவில் ரயில்நிலையம் அடையாளம் காணப்பட்டு, அதை மேம்படுத்தும் நடவடிக்கையில் ரயில்வே நிா்வாகம் ஈடுபட்டது.

இந்நிலையில், ஆட்டோ மொபைல் துறைக்காக, சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து பீகாா் மாநிலம் ராம்ஹா்வா(நேபாள எல்லை அருகே பகுதி)க்கு முதல் சரக்கு ரயில் சேவை கடந்த புதன்கிழமை தொடங்கியது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது:

ரெனால்ட்-நிசான் நிறுவனத்தின் காா்கள் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டன. இதன்மூலமாக, ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ.18.27 லட்சம் வருவாய்கிடைக்கும். சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ஆட்டோ மொபைல் சரக்குகள் எடுத்து செல்வது வரும் காலங்களில் அதிகரிக்கும். இதற்காக, அனைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com