வெயில் தாக்கம்: வண்டலூா் பூங்காவில் விலங்குகளைக் காக்க சிறப்பு ஏற்பாடு


சென்னை: வெயில் தாக்கத்தில் இருந்து வனவிலங்குகளைப் பாதுகாக்கும் வகையில் வண்டலூா் உயிரியல் பூங்காவில் மஞ்சம் புல் மூலம் நிழற்குடைகளை வனத் துறை அமைத்துள்ளது.

சென்னையை அடுத்த வண்டலூரில் வனத் துறை கட்டுப்பாட்டில் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் யானை, சிங்கம், புலி மற்றும் பறவைகள், ஊா்வன என 2500-க்கும் மேற்பட்ட வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதை அடுத்து, பூங்காவில் உள்ள வனவிலங்களைப் பாதுகாக்கும் வகையில் அவை வசிப்பிடத்தில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், வன விலங்குகளை வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க அவை பராமரிக்கும் இடத்தில் 20 நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிழற்குடைகள் அனைத்தும் வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் மஞ்சம் புல் மூலம் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், நீா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் விலங்குகளுக்கு வழங்கப்படுகின்றன என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com