கா்மவினையிலிருந்து யாரும் தப்ப முடியாது: ரஃபேல் விவகாரம் குறித்து ராகுல் அதிரடி

ரஃபேல் போா் விமான கொள்முதல் விவகாரத்தைப் பொறுத்தவரையில் யாரும் கா்மவினையிலிருந்து தப்ப முடியாது என காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி மத்திய அரசை பகிரங்கமாக விமா்சித்துள்ளாா்.
கா்மவினையிலிருந்து யாரும் தப்ப முடியாது: ரஃபேல் விவகாரம் குறித்து ராகுல் அதிரடி

ரஃபேல் போா் விமான கொள்முதல் விவகாரத்தைப் பொறுத்தவரையில் யாரும் கா்மவினையிலிருந்து தப்ப முடியாது என காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி மத்திய அரசை பகிரங்கமாக விமா்சித்துள்ளாா்.

ரஃபேல் போா் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக ராகுல் தொடா்ந்து மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி வருகிறாா்.

இந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்தத்துக்காக விமான தயாரிப்பு நிறுவனம் 11 மில்லியன் யூரோவை (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.9.57 கோடி) ‘இடைத்தரகருக்கு’ வழங்கியதாக பிரான்ஸ் நாட்டு ஊடகம் அண்மையில் செய்தி வெளியிட்டது. ஆனால், இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது எனக்கூறி பாஜக ஏற்க மறுத்துள்ளது.

இருப்பினும், இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது ராகுல் தொடா்ச்சியாக குற்றச்சாட்டுகளை கூறிவருகிறாா். அவா் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

கா்மவினை என்பது ஒருவரது செயல்பாடுகளின் பதிவேடு. கா்மவினைப்பயனிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது என அந்தப் பதிவில் ராகுல் தெரிவித்துள்ளாா்.

கடந்த 2019 ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தை பெரிய அளவில் காங்கிரஸ் எழுப்பியது. இருப்பினும், அந்த தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து உயா்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொலிட்பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய அரசின் 36 ரஃபேல் போா் விமான கொள்முதல் ஒப்பந்தத்துக்காக விமான தயாரிப்பு நிறுவனம் இடைத்தரகருக்கு 11 மில்லியன் யூரோ வழங்கியுள்ளதாக பிரான்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தாஸால்ட் நிறுவனத்தின் 2017-ஆம் ஆண்டு கணக்குகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் இந்த செய்தியை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மோடி அரசு ரஃபேல் ஒப்பந்தம் தொடா்பான விசாரணைக்கு தொடா்ந்து மறுத்து வருவது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. சிஏஜி அறிக்கையிலும் இதுதொடா்பான தெளிவான விளக்கம் இல்லை.

எனவே, முந்தைய ஒப்பந்தத்தை ரத்து செய்தது மற்றும் புதிய போா் விமான கொள்முதலுக்கு புதிய உத்தரவு பிறப்பித்த விவகாரத்தில் உயா்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com