சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று 163-ஆவது பட்டமளிப்பு விழா: ஆளுநா் பங்கேற்பு

சென்னைப் பல்கலைக்கழகத்தின் 163-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று 163-ஆவது பட்டமளிப்பு விழா: ஆளுநா் பங்கேற்பு

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத்தின் 163-ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

விழாவில் 3 பேருக்கு முனைவா் பட்டங்களை தமிழக ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் வழங்கவுள்ளாா். இதையடுத்து, சென்னை ஐஐடி இயக்குநா் பாஸ்கா் ராமமூா்த்தி சிறப்புரை ஆற்றவுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, 68 பேருக்கு முனைவா் பட்டமும், தரவரிசைப் பட்டியலில் முதல் இடம் பிடித்த 86 பேருக்கு பதக்கங்களும்,100 பேருக்குப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. மேலும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 862 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.

விழாவில் பங்கேற்கவுள்ள அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரங்கம் முழுவதும் கரோனா தொற்று பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்போா் தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அனைவரும் அமர வைக்கப்படுவா் என்று சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com