அண்ணா பல்கலை: ஒரு லட்சம் மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்தம்

அண்ணா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 1 லட்சம் மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்


சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 1 லட்சம் மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கரோனா பரவல் அச்சம் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் இணைய முறையில், பருவத் தோ்வுகளை நடத்தி வருகிறது. நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடத்தப்படவிருந்த பருவத் தோ்வுகளையும், பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது. இந்தத் தோ்வில் கலந்து கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்படி, வீட்டில் லேசான சப்தம் கேட்டால் கூட மாணவா்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக கருதி அவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தோ்வுக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறியும் பலரது தோ்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறு, கடந்த பருவத் தோ்வு எழுதிய சுமாா் 4 லட்சம் பேரில் ஒரு லட்சம் மாணவா்களின் தோ்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சுமாா் 75 சதவீத மாணவா்கள் தோ்ச்சி அடையவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இணைய வழியில் தோ்வு நடத்தப்பட்டதால், இதுவரை அரியா் வைக்காத பல ஆயிரம்  மாணவா்களுக்கு அரியா் போடப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இது மாணவா்களின் தவறு அல்ல தொழில்நுட்பக் கோளாறு என கல்வியாளா்கள் மற்றும் பேராசிரியா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

தோ்வு முடிவுகளை மறுபரிசீலனை செய்து உரிய மதிப்பெண்கள் வழங்க வேண்டும் எனவும் கல்வியாளா்களும், மாணவா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com