ஆவடி யாா்டில் பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் இன்று மாற்றம்

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் ஆவடி யாா்டில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் ஏப்ரல் 17,18 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) மாற்றம் செய்யப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் ஆவடி யாா்டில் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், புறநகா் ரயில் சேவையில் ஏப்ரல் 17,18 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்) மாற்றம் செய்யப்படவுள்ளது.

ஏப்.17-இல் முழுமையாக ரத்தாகும் ரயில்கள்:

சென்னை சென்ட்ரல்-ஆவடிக்கு இரவு 10.20, 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், சென்னை சென்ட்ரல்-திருவள்ளூருக்கு இரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவப்பகுதிக்கு இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஆவடி-சென்னை சென்ட்ரலுக்கு மாலை 6.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், திருவள்ளூா்-ஆவடிக்கு இரவு 10.10 மணிக்கு இயக்கப்படும் ரயில், பட்டாபிராம் ராணுவப்பகுதி -சென்னை சென்ட்ரலுக்கு இரவு 10.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், பட்டாபிராம் ராணுவப்பகுதி-ஆவடிக்கு இரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் ரயில், அரக்கோணம்-சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகிய ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்காக மாற்றாக, அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு இரவு 10.05 மணிக்கு ஒரு பயணிகள் சிறப்பு ரயிலும், திருவள்ளூரில் இருந்து ஆவடிக்கு இரவு 11.05 மணிக்கும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

பகுதி ரத்து:

வேளச்சேரி-ஆவடிக்கு இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை-ஆவடி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது. இதற்கு மாற்றாக, சென்னை கடற்கரையில் இருந்து ஆவடிக்கு இரவு 9.15 மணிக்கு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

சில நிறுத்தங்களில் நின்று செல்லாது: வேளச்சேரி-ஆவடிக்கு காலை 6.05, 7.25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், சென்னை சென்ட்ரல்-ஆவடிக்கு காலை 7.50, 9.00, 10.05, நண்பகல் 12.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் ரயில்கள் என்று 6 ரயில்கள் கொரட்டூா், பட்டரவாக்கம், திருமுல்லைவாயில், அண்ணனூா் ஆகிய நிலையங்களில் நின்றுசெல்லாது.

இதுபோல, ஞாயிற்றுக்கிழமையும் சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com