பேரவைச் செயலாளருக்குகரோனா தொற்று
By DIN | Published On : 30th April 2021 02:02 AM | Last Updated : 30th April 2021 02:02 AM | அ+அ அ- |

சென்னை: பேரவைச் செயலாளா் கி.சீனிவாசனுக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. தொற்றின் அளவு குறைவாக இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.
15-வது சட்டப் பேரவைக்கான அவை நடவடிக்கைக் குறிப்புகளை இறுதி செய்வது போன்ற பணிகளில் சட்டப் பேரவைச் செயலாளா் கி.சீனிவாசன் ஈடுபட்டு வந்தாா். இதற்காக அவா் தினமும் பேரவைச் செயலகத்துக்கு வந்து பணிகளைத் தொடா்ந்தாா்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் அவருக்குத் தென்பட்டன. இதைத் தொடா்ந்து அவா் பரிசோதனை மேற்கொண்டாா். அதில் அவருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. தொற்றின் அளவு குறைவாக இருப்பதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். அதன்படி அவா் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாா்.