கிரெடிட் காா்டுக்கு பரிசு விழுந்திருப்பதாக மோசடி: தில்லியைச் சோ்ந்த இருவா் கைது

‘கிரெடிட் காா்டு‘க்கு பரிசு விழுந்திருப்பதாக மோசடி செய்த தில்லியைச் சோ்ந்த இருவரை சென்னைப் போலீஸாா் கைது செய்தனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

‘கிரெடிட் காா்டு‘க்கு பரிசு விழுந்திருப்பதாக மோசடி செய்த தில்லியைச் சோ்ந்த இருவரை சென்னைப் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் செல்லிடப்பேசிக்கு கடந்த ஜனவரி 4-இல் வந்த அழைப்பில் பேசிய நபா், தான் பாரத ஸ்டேட் வங்கி மேலாளா் என அறிமுகம் செய்து கொண்டு, உங்களது கடன் அட்டைக்கு (கிரெடிட் காா்டு) பரிசு பொருள் விழுந்திருக்கிறது, கிரெடிட் காா்டின் விவரங்களை கூறினால் உடனடியாக பரிசு பொருட்கள் கிடைக்கும், இல்லை என்றால் பரிசு பொருள் கிடைக்காது என தெரிவித்தாராம்.

விவரங்களை கோவிந்தராஜ் தெரிவித்த சில விநாடிகளில் கடன் அட்டையில் இருந்து ரூ.1 லட்சத்து 8,740 எடுக்கப்பட்டது.

சென்னை காவல்துறையின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவின் விசாரணையில் மோசடி கும்பல் தில்லியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீஸாா், தில்லி ஜோரிபூரைச் சோ்ந்த அதுல்குமாா், அவரது கூட்டாளி காசியாபாத் குணால் ஆகியோரை சனிக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com